அறுவை சிகிச்சை முடிந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி நலமுடன் உள்ளார்: மருத்துவர்கள் தகவல்!

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

உடல் நலக்குறைவு காரணமாக சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேரணியில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்
பேரணியில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

தொகுதி நலப் பணிகள், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த காா்த்தி சிதம்பரம், ஜீரண மண்டல பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்பட்டது . இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன் தினம் அவர் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு குடல்-இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் சந்தோஷ் ஆனந்த் தலைமையிலான மருத்துவா்கள் அவரை பரிசோதித்து சிறிய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனா். அதன்படி, ஜீரண மண்டல பிரச்சினையைச் சீராக்கும் நுண் துளை அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவா் விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in