விபத்தில் இறந்த மாணவனின் கண்கள் தானம்: சோகத்திலும் நெகிழ வைத்த பெற்றோர்!

விபத்தில் உயிரிழந்த மாணவர் ரோஷன்
விபத்தில் உயிரிழந்த மாணவர் ரோஷன்

குன்னூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது பள்ளி மாணவரின் கண்களை பெற்றோர் தானமாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் அடுத்த பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பெலிக்ஸ், பிரியா தம்பதிகளின் 16வயது மகன் ரோஷன் இன்று காலை சாலைவிபத்தில் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற போது, தனியார் பள்ளி பேருந்து மோதியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக, குன்னூர் அரசு மருத்துவமனையில் ரோஷனின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

பேருந்து மோதி விபத்தில் சிக்கிய டூவீலர்
பேருந்து மோதி விபத்தில் சிக்கிய டூவீலர்

மகன் இறந்த சோகத்தில் இருந்த பெற்றோர் இருவரும், ரோஷனின் கண்களைத் தானமாக வழங்க முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இருவரிடமும் முறையான அனுமதி பெற்று, கண்களைத் தானமாக பெற்று, உதகை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தது.

இந்த கண்கள், பார்வையிழந்தவர்களுக்குப் பயன்படுத்தப்படலாம் எனவும், இல்லையேல் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக பயன்படுத்தலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகன் இறந்த சோகத்திலும் கண் தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவரின் கண்களை தானமாக கொடுத்த பெற்றோர்
உயிரிழந்த மாணவரின் கண்களை தானமாக கொடுத்த பெற்றோர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in