டெங்குவைத் தொடர்ந்து வேகமாக பரவும் சிக்குன்குனியா... பொதுமக்கள் பீதி!

காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள்
காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள்

மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் அத்துடன் சேர்ந்து மற்றொரு காய்ச்சலும்  பரவி  மக்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலும் மருத்துவத்துறை சார்பில் தினமும் வெளியிடப்படுகிறது.  டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆயிரம் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்டன, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக  சென்னையில் மற்றும் ஒரு  காய்ச்சலும் பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவர்கள் இந்த  காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு டெங்கு இல்லை என்பதால் அது   சிக்குன் குனியாவாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர்.

மருத்துவமனையில் நோயாளிகள்
மருத்துவமனையில் நோயாளிகள்

இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்கள் தொடர் காய்ச்சல் இருக்கும். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பரவியபோது ஏற்பட்ட கடுமையான மூட்டு வலி தற்போது ஏற்படவில்லை. ஆனாலும் லேசான மூட்டு வலி 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிலர் உள் நோயாளிகளாகவும், சிலர் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களைக் கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. 

நோயாளிகள்
நோயாளிகள்

தற்போது வைரஸ் காய்ச்சல் பரவுவதால் குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் சேர்ந்து சுவாச பாதிப்பும், உணவு சாப்பிடுவதில் சிரமம் போன்றவையும் ஏற்படுகிறது. மேலும், சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இருப்பினும் 3 நாட்களுக்கு மேல் குழந்தைகளுக்கு காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in