அடுத்த அதிர்ச்சி... கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்கவிளைவுகள்

கோவிஷீல்டு - கோவாக்ஸின் தடுப்பூசிகள்
கோவிஷீல்டு - கோவாக்ஸின் தடுப்பூசிகள்

கோவிஷீல்டு வரிசையில் கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பக்கவிளைவுகளுக்கான சாத்தியங்களை, புதிய ஆய்வொன்று உறுதி செய்திருக்கிறது. இது இந்தியாவில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகைப் புரட்டிப்போட்ட கொரோனா தொற்று இந்தியாவிலும் கொத்துக்கொத்தாக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்த நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என 2 தடுப்பூசிகள் இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் வாயிலாக கோடிக்கணக்கிலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த இரண்டில் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான பக்கவிளைவுகள் அண்மையில் வெளியாகி இந்தியர்களை அதிர வைத்தன.

 கொரோனா தடுப்பூசியின் மாரடைப்பு அபாயங்கள்
கொரோனா தடுப்பூசியின் மாரடைப்பு அபாயங்கள்

அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனிடையே, த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்(டிடிஎஸ்) எனப்படும் ரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்தது.

கோவிஷீல்டு தடுப்பூசி ரத்த உறைவை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதாக அதனை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக்கொண்ட விவகாரம் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரோனா காலத்துக்குப் பின்னர் அதிகரித்த மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகளின் பின்னணியில் கோவிஷீல்டு பக்கவிளைவுகள் அதிகம் விவாதிக்கப்பட்டன. இந்த சூழலில் கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம், தங்கள் தடுப்பூசியால் பாதகமில்லை என விளக்கமளித்தது.

ஆனால் புதிதாக வெளியாகி இருக்கும் மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று, கோவாக்ஸின் பக்கவிளைவுகளை பட்டியலிட்டுள்ளது. இளம்பெண்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வினை, ’ஸ்பிரிங்கர்லின்க்’ வெளியிட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்களுக்கான பாதிப்புகளை அடையாளம் கண்டுள்ளனர். ஏஇஎஸ்ஐ என்ற தலைப்பில் இந்த பாதிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி

ஆய்வின் 1,024 பங்கேற்பாளர்களில், மூன்றில் ஒரு பங்கினருக்கு வைரஸ் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் அடையாளம் காணப்பட்டன. தோல் மற்றும் தோலடி பாதிப்புகள், நரம்பு மண்டலக் பாதிப்புகள், தசைக்கூட்டு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவை அடையாளம் காணப்பட்டன. பெண்களில் மாதவிடாய் அசாதாரணங்கள், ஹைப்போ தைராய்டிசம், பார்வை தடுமாற்றங்கள் கண்டறியப்பட்டன. இவர்களில் இணைநோய் கண்டவர்களுக்கு இந்த பக்கவிளைவுகள் கூடுதலாகவும் அறியப்பட்டுள்ளன. ஆய்வின் காலம் ஒரு வருடமே என்பதும், ஆயிரத்து சொச்சம் நபர்களிடையே மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதும், கோவாக்ஸினுக்கு எதிரான விரிவான ஆய்வை கோருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in