தேசிய மருத்துவ கவுன்சில் முரண்டு... தமிழகத்தில் வீணாகும் 83 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள்!

எம்பிபிஎஸ்
எம்பிபிஎஸ்

தேசிய மருத்துவ கவுன்சிலின் பிடிவாதம் காரணமாக, தமிழ்நாட்டில் 83 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்ற போது, 6 இடங்கள் காலியாக இருந்ததை அடுத்து தேசிய மருத்துவ கவுன்சில் நிரப்புவதற்காக வழங்கப்பட்டது. ஆனால், அதனை நிரப்ப முடியாமல் தேசிய மருத்துவ கவுன்சில் கைவிட்டது. இதனால் ஐந்தரை ஆண்டுகளுக்கு இந்த இடங்கள் காலியாகவே இருந்து வீணானது.

இந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போதும் 83 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாகவே உள்ளது.

எம்பிபிஎஸ்
எம்பிபிஎஸ்

இதில் 16 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மூன்று எய்ம்ஸ், மதுரை மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன. மருத்துவக் கல்வி மாணவர்கள் இடையே கடுமையான போட்டி இருந்துவரும் நிலையில் காலியாக இருக்கும் இடங்களை நான்காம் சுற்றும் முடிவுக்கு பிறகும் தேசிய மருத்துவ கவுன்சில் மாநில அரசுகளிடம் ஒப்படைக்காமல் இருந்து வருகிறது.

தேசிய மருத்துவ ஆணையமோ அல்லது மத்திய அரசோ, உச்ச நீதிமன்றத்தை நாடி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கால நீட்டிப்பை கோரினால் மட்டுமே, இவ்விடங்களை நிரப்ப முடியும். இல்லாவிட்டால் இந்த ஆண்டும் 83 இடங்களும் வீணாகப் போகும் நிலை உருவாகியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி காலியான இடங்களில் மாநில அரசுக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ, திருப்பி அளிக்க முடியாது என மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது. மாணவர்கள் சிலர் கலந்தாய்வில் பங்கேற்று, மருத்துவக் கல்லூரி சேர்க்கை பெற்று, பிறகு கல்லூரிகளில் சேராமல் இருந்து விடுவதாலும் இந்த காலியிடங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

அனைத்திந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் 16 இடங்களும், மதுரை மருத்துவக் கல்லூரியில் 3 இடங்களும், ஸ்டான்லி மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் தலா 2 இடங்களும், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் தலா ஓரு இடம் என 83 இடங்கள் காலியாகவே உள்ளன.

எம்பிபிஎஸ்
எம்பிபிஎஸ்

இது மட்டுமின்றி பல மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு 26 லட்சத்துக்கும் மேல் கல்விக் கட்டணம் என்பதால் இதுவரை 50 இருக்கைகள் காலியாக உள்ளன. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 13 சேர்க்கை இடங்களும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 4 இடங்களும் காலியாக உள்ளன.

இதுபோலவே பல் மருத்துவர் மாணவர் சேர்க்கையிலும் காலியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் 800 மாணவர் சேர்க்கை இடங்களை அளிக்கிறது. இதில் 15 சதவீதம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களாகும்.

இதுகுறித்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 83 மருத்துவ மாணவர் சேர்க்க இடங்களை நிரப்ப வழி வகுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் படிக்க இயலாமல் தவிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீட் தேர்வு காரணமாக தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், 83 இடங்கள் காலியாகி வீணாக உள்ள சம்பவம் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எம்பிபிஎஸ்
எம்பிபிஎஸ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in