ஆற்றில் குளித்ததால் 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட அரிய வகை நோய்... உயிரைக் காப்பாற்ற போராட்டம்; கேரளாவில் அதிர்ச்சி

அமீபிக் மெனிங்கோமென்சிபாலிட்டிஸ் நோய்
அமீபிக் மெனிங்கோமென்சிபாலிட்டிஸ் நோய்

கேரளாவில் ஆற்றில் குளித்ததால் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவரும் 5 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், கடந்த மே 1ம் தேதி கடலண்டி ஆற்றில் 5 குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் விடுமுறைக்காக சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஆற்றில், குழந்தைகள் அனைவரும் இறங்கி குளித்துள்ளனர். பின்னர் அனைவரும் வீடு திரும்பிய நிலையில், கடந்த மே 10ம் தேதி சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பின்னர் கோழிக்கோட்டில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலண்டி ஆறு
கடலண்டி ஆறு

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அரிய வகை நோயான ’அமீபிக் மெனிங்கோமென்சிபாலிட்டிஸ்’ அல்லது ’நியக்லேரியா’ என்ற நோய் தாக்குதல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நீச்சல் குளம் மற்றும் கடுமையாக மாசடைந்த நீர் நிலைகளில் குளிக்கும்போது ஒருவகை அமீபா நுண்ணுயிரி உடலுக்குள் புகுந்து இந்த நோய் ஏற்படுகிறது.

இந்த நோய் ஏற்பட்டவர்களின் மூளையை, இந்த அமீபா கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும். இதனால் சில காலம் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச் சுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்னர் அது தீவிரமாகி வலிப்பு நோய் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகும் நிலை உருவாகிறது.

கோழிக்கோடு அரசு மருத்துவமனை
கோழிக்கோடு அரசு மருத்துவமனை

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மில்டிபோஸின் என்ற மருந்து வழங்கப்பட வேண்டும். ஆனால் மிகவும் அரிய வகை நோய் என்பதால், இந்த மருந்துகள் அனைத்து நாடுகளிலும் விரைவாக கிடைப்பதில்லை. அந்த வகையில் இந்த 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவருக்கு பல்வேறு விதமான மருத்துவ முறைகள் மூலம் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், மாநில அரசும் அந்த மருந்தை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வந்து சிறுமிக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக, கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நியக்லேரியா நோய் தொற்று அபாயம் குறித்து அமெரிக்காவில் ஆற்றங்கரயோரம் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை
நியக்லேரியா நோய் தொற்று அபாயம் குறித்து அமெரிக்காவில் ஆற்றங்கரயோரம் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை

நாளுக்கு நாள் குழந்தையின் உடல்நிலை மோசமாகி வரும் நிலையில், விரைவாக இந்த மருந்து கிடைத்தால் மட்டுமே சிறுமியை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனிடையே குழந்தையுடன் சேர்ந்து ஆற்றில் குளித்த 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நால்வரை, மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது வரை அவர்கள் நான்கு பேருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாணவி குளித்த கடலண்டி ஆற்றில் உள்ள பரக்கல் பகுதியில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் எச்சரிக்கை விடுத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in