இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் திளைக்கும் வாடிக்கையாளர்கள்

இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: மகிழ்ச்சியில் திளைக்கும் வாடிக்கையாளர்கள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4, 740 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 4,805 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 குறைந்து ரூ.37,920க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து 64 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 800 ரூபாய் குறைந்து 64,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை 2 ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக உயர்ந்து உச்சத்தில் இருந்தது. தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையத் தொடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in