தங்கத்தின் விலை தடாலடி உயர்வு - கலக்கத்தில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை
தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 4,820 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 38,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5,258 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் வெள்ளியின் விலையானது இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 6 ஆயிரம் ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 6 ரூபாய் 61.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 6 ஆயிரம் ரூபாய் குறைந்து 61,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலையான கடந்த வாரம் முதலே படிப்படியாக உயர்ந்துவருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு 57 ரூபாய் உயர்ந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in