தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த வாரம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாயையும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தையும் தாண்டி அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 5,010 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.70 ரூபாய் குறைந்து ரூ.70.80க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,700 ரூபாய் குறைந்து 70,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in