
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று தடாலடியாக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 5,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 40,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பல மாதங்களுக்கு பிறகு நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்றும் விறுவிறுவென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 60 காசுகள் உயர்ந்து விலை 71.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 600 ரூபாய் உயர்ந்து 71,600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.