தங்கத்தின் விலை தடாலடி உயர்வு - சவரன் ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்றும் தடாலடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து 4,940 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 312 ரூபாய் உயர்ந்து 39,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 42 ரூபாய் உயர்ந்து 5,389 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்வினை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 68.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 800 ரூபாய் உயர்ந்து 68,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் முதலே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in