
தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் தடாலடியாக உயர்வினை சந்தித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே அதிரடியாக உயர்ந்துவரும் தங்கத்தின் விலையானது, இன்றும் உயர்வினை கண்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 4,875 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் உயர்ந்து 39,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 37 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 39 ஆயிரத்தை தொட்டுள்ளது.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று மளமளவென உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.6.10 உயர்ந்து ரூ.67.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 6,100 ரூபாய் உயர்ந்து 67,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்துள்ள காரணத்தால் நகைப்பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.