தங்கத்தின் விலை சரிந்தது - வெள்ளியின் விலையும் வீழ்ச்சி

தங்கத்தின் விலை சரிந்தது - வெள்ளியின் விலையும் வீழ்ச்சி

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சரிவினை சந்தித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,690 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலையானது சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை தடாலடியாக சரிவை சந்தித்துள்ளது. இன்று வெள்ளியின் விலையானது கிராமுக்கு ரூ.1.80 குறைந்து ரூ.60.50க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1800 ரூபாய் குறைந்து 60,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாத இறுதியிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மளமளவென உயர்ந்த நிலையில், கடந்த வாரத்திலிருந்து விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in