
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 47 ரூபாய் உயர்ந்து 5,115 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 376 ரூபாய் உயர்ந்து 40,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 2.20 ரூபாய் உயர்ந்து 74.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 2200 ரூபாய் உயர்ந்து 74,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.