தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் உயர்வினை சந்தித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரம் ரூபாயையும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 5,055 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 40,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து 73 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் உயர்ந்து 73,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in