தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை

தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து 5,165 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உள்ள சூழலில், வெள்ளியின் விலை கடந்த ஒரு வார காலமாகவே குறைந்து வருகிறது. அக்டோபர் 6ம் தேதி முதல் இன்று வரை ஒரு கிலோ வெள்ளியின் விலை 4700 ரூபாய் வரை குறைந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.62.30க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து 62,300க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in