தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்

தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்

தங்கத்தின் விலை இன்று ஒரே தடாலடியாக உயர்வினை சந்தித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே ஊசலாட்டத்தில் இருந்த தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் தடாலடியாக உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 53 ரூபாய் உயர்ந்து 4,770 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 424 ரூபாய் உயர்ந்து 38,180 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று மளமளவென உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.90 உயர்ந்து ரூ.66.30க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,900 ரூபாய் உயர்ந்து 66,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெற்றியின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்துள்ள காரணத்தால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in