தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையானது கிராமுக்கு நேற்று 11 ரூபாயும், நேற்று முன் தினம் 15 ரூபாயும் உயர்ந்தது. கடந்த வார இறுதியில் குறையத் தொடங்கிய தங்கத்தின் விலை இந்த வாரத்தின் முதல் நாளிலிருந்தே உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்த சூழலில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 4,715 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 208 ரூபாய் குறைந்து 37,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை நேற்று முன் தினம்(நவம்பர் 1ம் தேதி) ஒரே நாளில் மட்டும் கிலோவுக்கு 2000 ரூபாயும், கிராமுக்கு 2 ரூபாயும் விலை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 64 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 64 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in