தங்கத்தின் விலையில் சரிவு - வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை
தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று சரிவினை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,705 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 5,133 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ரூ.63.70 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 700 ரூபாய் அதிகரித்து 63,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in