தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,715 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 5,144 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது இன்று உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையானது மாற்றமின்றி தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 63 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலையான கடந்த வாரத்தில் படிப்படியாக குறைந்துவந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in