எகிறும் தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாதம் முதல் நிலையற்ற தன்மையுடனே உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டாலும் படிப்படியாக தங்கத்தின் விலை கூடிக்கொண்டே உள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,600-க்கும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது.

தங்கம் விலை
தங்கம் விலை

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.79 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in