தங்கத்தின் விலை தடாலடி உயர்வு: கலக்கத்தில் நகைப்பிரியர்கள்

தங்கம் விலை
தங்கம் விலை

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது இன்றும் உயர்வினை சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 4,931 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 280 ரூபாய் உயர்ந்து 39,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் உயர்ந்து 5,378 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாகவே தடாலடியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று 70 காசுகள் உயர்ந்து 68.20 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 700 ரூபாய் உயர்ந்து 68,200 ரூபாயாகவும் உள்ளது. கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in