
தங்கத்தின் விலையானது இன்றும் உயர்வினை சந்தித்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 4,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 39,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து 5,411 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் கடந்த சில நாட்களாக தடாலடியாக உயர்ந்தது. ஆனால் இன்று வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. இதனால் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.50 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 68,500 ரூபாயாகவும் உள்ளது. கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.