தங்கத்தின் விலை திகுதிகு உயர்வு: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

தங்கத்தின் விலை திகுதிகு உயர்வு: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 4,901 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 64 ரூபாய் உயர்ந்து 39,208 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 5,347 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்வினை சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 67.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து 67,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,900 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in