
தங்கத்தின் விலை இன்றும் உயர்வினை சந்தித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துவரும் நிலையில், இன்றும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து 4,875 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் உயர்ந்து 4,892 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 136 ரூபாய் உயர்ந்து 39,136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் நேற்று கிராமுக்கு ரூ.6.10 உயர்ந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ.67.50க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 67,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் காரணத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்