தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலை எகிறியது!

தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலை எகிறியது!

தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து 4,758 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து 38,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5,190 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.66.70 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in