மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: வெள்ளியின் விலையில் சரிவு

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை: வெள்ளியின் விலையில் சரிவு

தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது அதே நேரத்தில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,740 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 62.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் குறைந்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in