தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையானது கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு 750 ரூபாய் அதிகரித்தது. அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி என இரண்டு நாட்கள் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 4,740 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று சிறிது குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.63.70க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் அதிகரித்து 63,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே ஊசலாட்டத்தில் இருந்த நிலையில், தீபாவளி பண்டிகை நேரத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டதால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in