தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4,665 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையானது கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.61.50க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் குறைந்து 61,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்திலிருந்து தங்கத்தின் விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in