தங்கம், வெள்ளி விலையில் சரிவு: நிம்மதி பெருமூச்சுவிடும் வாடிக்கையாளர்கள்

தங்கம், வெள்ளி விலையில் சரிவு: நிம்மதி பெருமூச்சுவிடும் வாடிக்கையாளர்கள்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 4,685 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து 5,111 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப்போலவே வெள்ளியின் விலையும் சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலையானது 50 காசுகள் குறைந்து 61 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவிற்கு 500 ரூபாய் குறைந்து 61,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில், நேற்றும் இன்றும் குறைந்துள்ளது. பண்டிகை காலத்தில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in