தங்கத்தின் விலையில் சரிவு: மகிழ்ச்சியில் திளைக்கும் வாடிக்கையாளர்கள்!

தங்கத்தின் விலையில் சரிவு: மகிழ்ச்சியில் திளைக்கும் வாடிக்கையாளர்கள்!

ஒரு வாரத்துக்குப் பின்னர் தங்கத்தின் விலை இன்று குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக சிறிய அளவில் குறைந்து வந்த நிலையில், இன்று குறிப்பிடத்தக்க அளவு விலை சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4,705 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 37,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து 5,133 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து 63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது விலை படிப்படியாக குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மீண்டும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in