டைட்டானிக் கப்பல் விபத்துக்கு ஆளாகி 111 ஆண்டுகள் ஆன பிறகும், அது தொடர்பான நினைவுகள் மக்கள் மனங்களில் இருந்து நீங்கியபாடில்லை. டைட்டானிக் கப்பல் தொடர்பான சேகரிப்புகளில் ஒன்றாக, அதன் முதல் வகுப்பு உணவகத்தின் மெனு தற்போது ஏலத்துக்கு வருகிறது.
1912, ஏப்ரல் 11 அன்று டைட்டானிக் கப்பல் விபத்துக்கு ஆளானது. அதன் பிரம்மாண்ட கட்டுமானம் மற்றும் அதிலுள்ள வசதிகள் மட்டுமன்றி, அது கடலில் மூழ்கி விபதுக்குள்ளானதும், வரலாற்றில் சுவடுகளின் டைட்டானிக் நீடித்திருக்க காரணமானது.
இன்றைக்கும் டைட்டானிக் சிதிலத்தை பார்வையிட, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நீர்மூழ்கியில் ஆழ்கடலுக்கு பயணம் செல்வோர் உள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி டைட்டானிக் விபத்துக்குள்ளானது, இன்னொரு பிரம்மாண்டமாக திரைப்பட வடிவிலும் மக்களின் நினைவுகளில் பிற்பாடு தங்கிப்போனது.
தற்போது விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் எச்சங்களில் ஒன்றாக, அதன் முதல் வகுப்பு உணவகம் ஒன்றின் மெனு கார்ட் கிடைத்துள்ளத்து. அதில் பயணித்த கனடாவை சேர்ந்த லென் ஸ்டீபன்சன் என்பவர் சேகரிப்பிலிருந்து இந்த மெனு கார்டினை அவரது குடும்பத்தினர் கண்டெடுத்துள்ளனர். 2017-ல் லென் இறந்து போனார். அதன் பின்னர் அண்மையில் அவரது உடைமைகளை சரிபார்த்த போது இந்த மெனு கார்டு அடையாளம் காணப்பட்டது.
கோடீஸ்வர பயணிகளுக்கான இந்த மெனு கார்டு, பல சுவாரசியமான மற்றும் விலை அதிகமான உணவு ரகங்களை பட்டியலிட்டுள்ளது. விபத்துக்கு ஆளான டைட்டானிக் கப்பலின் சேகரிப்புகள் ஏலம் போவதின் அங்கமாக, இந்த மெனு கார்டு தற்போது ஏலத்துக்கு வருகிறது. பிரிட்டன் பவுண்டு மதிப்பில் 60 ஆயிரத்துக்கு இதன் விலையை நிர்ணயித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ61 லட்சமாகும்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!