கூகுள் பே மூலம் குறைந்த வட்டியில் சிறுகடன் வழங்கும் திட்டம் அந்த நிறுவனத்தால் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா முக்கிய வர்த்தக சந்தையாக இருக்கும் வேளையில், அதன் கூகுள் பே சேவை நாட்டின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது.
கூகுள் பே மூலம் இந்திய மக்களின் நிதி பரிமாற்ற தகவல்களைச் சேகரித்துள்ள நிலையில் புதிய கடன் திட்ட சேவையை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகங்களுக்கு உதவும் வகையில் Google Pay செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) அதாவது மிகவும் சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை கூகுள் வழங்குவதாக அந்த நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் அடிக்கடி தேவைப்படும், இதற்கு வங்கிகளில் ஒவ்வொரு முறையும் கடன் பெற முடியாது. இதேபோல் நண்பர்களிடம் ஒவ்வொரு முறையும் கேட்க முடியாது. இந்த இடைவெளியை பயன்படுத்திகொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது. இதற்காக கூகுள் தனது GPAY மூலம் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் சாச்செட் கடன்கள்.
இந்தியாவில் உள்ள சிறு வணிக முதலாளிகளுக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்க உள்ளது. இந்த கடன் வாங்கியவர்கள் இத்தொகையுடன் வெறும் 111 ரூபாய் மட்டும் வட்டியாக திருப்பி செலுத்தினால் போதும் என்று கூகுள் அறிவித்துள்ளது. இத்தகைய கடன் சேவைகளை வழங்க DMI ஃபைனான்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது.
சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான செயல்பாட்டு மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை Google Pay வாயிலாக செயல்படுத்த உள்ளது.
கடந்த 12 மாதங்களில் UPI மூலம் சுமார் 167 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகை நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூகுள் பே பிரிவின் துணைத் தலைவர் அம்பரீஷ் கெங்கே நேற்று நடந்த 9வது கூகுள் ஃபார் இந்தியா கூட்டத்தில் தெரிவித்தார்.
பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்
10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!
ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!
அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!