டாப் கியரில் லாபம் குவிக்கும் டாடா மோட்டார்ஸ்... டாடா குழுமத்தில் டிசிஎஸ் இடத்தை தட்டிப் பறித்தது!

டாடா மோட்டார்ஸின் வணிக வாகனங்கள்
டாடா மோட்டார்ஸின் வணிக வாகனங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மாற்றமாக டாடா குழுமத்தின் அதிக லாபம் குவிக்கும் நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

இந்தியாவின் பாரம்பரிய தொழில்நிறுவனக் குழுமங்களில் ஒன்று டாடா. உப்பு முதல் கப்பல் வணிகம் வரை டாடா குழுமம் களமிறங்காத தொழில்துறை இல்லை. அரசியல் பின்புலம், அதிகார அழுத்தம் ஆகியவற்றை அதிகம் நம்பியிராது, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமாகவே டாடா குழும நிறுவனங்கள் தழைத்து வருகின்றன.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ்

சுதந்திர இந்தியாவுக்கு முன்பிருந்தே இந்திய தொழில்துறையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் டாடா குழும நிறுவனங்கள், நிதானமாக தேசத்தின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்து வருகின்றன. தேசத்தின் மகத்தான வளர்ச்சியிலும் பங்களித்து வருகின்றன.

இந்த டாடா குழுமத்தில் அதிக லாபமீட்டும் நிறுவனமாக தகவல் தொழில்நுட்ப மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் விளங்கி வந்தது. குழுமத்தின் லாப நிறுவனங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதுவே முதலிடம் வகித்து வந்தது. இந்த நிலையில் புதிய மாற்றமாக டிசிஎஸ் நிறுவனத்தை முந்திக்கொண்டு, டாடா குழுமத்தின் லாபகர நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

2014ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான நிகர லாபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ17,483 கோடிகளை குவித்துள்ளது. மாறாக டிசிஎஸ்-ன் நிகர வருவாய் ரூ12,434 கோடியாக உள்ளது. டாடா மோட்டார்ஸின் அசுர வளர்ச்சியே அதன் அதிக லாபத்துக்கு காரணமாகி உள்ளது. இந்த வகையில் ஒரு வருடத்திற்கு முந்தைய 5,573.8 கோடி ரூபாயில் இருந்து 213.7 சதவீதம் ஆண்டு வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் தற்போது எட்டியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம்

ஒப்பீட்டளவில் டாடா குழுமத்தில் டிசிஎஸ் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் முந்தியிருப்பினும், இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் தனிப்பட்ட வகையில் சோடைபோகவில்லை. நிகர லாபத்தில் ரூ11,392 கோடியுடன் 9.1 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in