`சீரழிஞ்சு போச்சு ஸ்ரீலங்கா’- வலியைப் பாடும் டி.ராஜேந்தர்

சிம்புவுக்கு முத்தம் கொடுக்கிறார், அப்பா டி.ராஜேந்தர், அருகில் உஷா ராஜேந்தர்
சிம்புவுக்கு முத்தம் கொடுக்கிறார், அப்பா டி.ராஜேந்தர், அருகில் உஷா ராஜேந்தர்(கோப்புப் படம்)

``இலங்கையின் பொருளாதாரம் தாறுமாறாக சிதைந்து கிடக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை மக்கள் பல இன்னல்களை அனுபவித்துவருகின்றனர். இப்படியான சூழலில் ‘சீரழிஞ்சு போச்சு ஸ்ரீலங்கா’ என்னும் பாடலை பாடியுள்ளார் டி.ராஜேந்தர்.

சீரழிஞ்சு போச்சு ஸ்ரீலங்கா பாடல் வெளியீட்டு போஸ்டர்
சீரழிஞ்சு போச்சு ஸ்ரீலங்கா பாடல் வெளியீட்டு போஸ்டர்

இலங்கையின் இப்போதைய நிலையை மையமாகவைத்து `சீரழிஞ்சு போச்சு ஸ்ரீலங்கா' என்னும் பாடல் வரிகளை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இலங்கையில் இருக்கும் தமிழர்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சியைப்பற்றி கேள்விப்பட்டதுமே டி.ராஜேந்தர் பாட சம்மதித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சக்திவேல், வேல் ஒன்றானவன், சப்னா தெளபீக் என பலரும் இதில் பங்களித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களின் மீது தனக்கு எப்போதும் தனிப்பிரியம் உண்டு என சிலாகித்த டி.ராஜேந்தர், அங்குள்ள தமிழர்களின் நிலைகுறித்தும், அவர்களின் நல்வாழ்வுக்கான முயற்சிகள் குறித்தும் பாடல் குழுவினரிடம் தொடர்ந்து கேட்டுவந்துள்ளார். இந்தப் பாடலின் போஸ்டரை இப்போது ரிலீஸ் செய்திருக்கிறார்கள் தயாரிப்புக் குழுவினர். `சீரழிஞ்சு போச்சு ஸ்ரீலங்கா' பாடல் அங்கே இருக்கும் தமிழர்களின் வலியையும் பிரதானமாகப் பேசும் பாடல் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in