அதிகரிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை: இன்றைய உயர்வு எவ்வளவு?

அதிகரிக்கும் ஆபரணத் தங்கத்தின் விலை: இன்றைய உயர்வு எவ்வளவு?

கடந்த வாரத்தில் குறைந்துக் கொண்டே வந்த தங்கத்தின் விலையானது சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 4,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரனின் விலை 112 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து 59 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் உயர்ந்து 59 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஓரளவு குறைந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களாகவே தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பதால், இன்னும் விலை உயருமோ என வாடிக்கையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in