தனியார் வங்கிகளில் பணியாளர் விலகல் 30 சதவீதமாக அதிகரிப்பு... சக்திகாந்த தாஸ் அதிர்ச்சி தகவல்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

தனியார் வங்கிகளில் பணியாளர் விலகல் 30 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இந்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வர்த்தக நாளிதழ் சார்பில் மும்பையில் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு சேவைகள் திறனறிதல் ஆண்டு மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”சில முன்னணி தனியார் வங்கிகளில் பணியாளர் விலகல் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த விவகாரத்தை கையாள தனிக்குழு ஒன்றை வங்கிகள் உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் பணித்தேடல் என்பது முற்றிலும் மாறுபட்டுள்ளது. குறிப்பாக பணிமாறுதல் சிந்தனை என்பது முற்றிலுமாக மாறுபட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து வலுவாக உள்ளது.இரண்டாம் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலை, சர்வதேச வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், எந்த ஒரு சாத்தியமுள்ள அச்சுறுத்தல் சூழலையும் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் சிறந்த திறனை இந்தியா பெற்றுள்ளது” என்றார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in