ரூ.20 லட்சம் கோடி... சந்தை மூலதனத்தில் சாதனை படைத்த முதல் இந்திய நிறுவனமானது ரிலையன்ஸ்!

முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சந்தை மூலதனத்தில் ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

இன்றைய தினம்(பிப்.13) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சத்தை எட்டியது. இதன் மூலம் சந்தை மூலதனத்தில் ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறி உள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் 1.83 சதவீதம் உயர்ந்து, ரூ.2,958 என்ற உச்சத்தை தொட்டது. மேலும் கடந்த 52 வாரங்களில் 39.54 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மூலதனத்தின் இந்த புதிய எழுச்சி, முகேஷ் அம்பானியின் செல்வத்தையும் செழிப்பாக உயர்த்தியுள்ளது. அதாவது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 109 பில்லியன் டாலராக உயர்வு கண்டுள்ளது. நடப்பு 2024-ம் ஆண்டில் மட்டும் 12.5 பில்லியன் டாலர் அதிகரித்தில் இந்த சாதனை கைகூடியுள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவின் பெரும் பணக்காரராக உயர்ந்திருக்கிறார்; உலகளவில் 11வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ரிலையன்ஸ் தனது வணிக வரம்புகளை பரவலாக பன்முகப்படுத்தி வருகிறது. பாரம்பரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திலிருந்து, டிஜிட்டல் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனை வரை ரிலையன்ஸ் முன்னணியில் உள்ளது. தொலைத்தொடர்பு துறையின் முன்னோடியாக 4ஜி-யைத் தொடந்து 5ஜி உள்கட்டமைப்பிலும் முன்னணி வகித்து வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - முகேஷ் அம்பானி

இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது, பங்கு பரிந்துரை நிறுவனங்களின் செல்லமாகவும் மாறி உள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தை கண்காணிக்கும் 35 பங்குச்சந்தை ஆய்வாளர்களில், 22 பேர் வாங்குவதை ஊக்குவிக்கின்றனர். ஐந்து பேர் ஹோல்ட் செய்யுமாறு பரிந்துரைக்க, இருவர் மட்டும் பங்குகளை விற்று லாபம் பார்க்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் ரூ.15.07 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ரூ. 10.56 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் ஹெச்டிஎஃப்சி வங்கி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in