அடேயப்பா... ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!

நாளை பத்திரபதிவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
நாளை பத்திரபதிவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

நாளை ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் 180 கோடி ரூபாயை வருவாயாக பதிவுத்துறை ஈட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுப முகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதோடு, முன்பதிவு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவண பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று ஒரே நாளில் சுமார் 180 கோடி ரூபாய் வருவாயை பதிவுத்துறை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவாளர் அலுவலகம்
பதிவாளர் அலுவலகம்

நாளை பத்திரப்பதிவுகள் அதிக அளவில் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 முன்பதிவு வில்லைகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

அதிகளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு நூற்றுக்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாளை பத்திரபதிவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
நாளை பத்திரபதிவுகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in