
விதிமுறைகளை மீறியதாக ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பல கோடிகளில் அபராதம் விதித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வகுத்துத் தந்துள்ள ஒழுங்குமுறை விதிமுறைகளில் சிலவற்றை மீறியதாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. இவற்றில் ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ12.19 கோடியும், கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ3.95 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன.
'கடன்கள் மற்றும் முன்பணங்கள் கையாளுகையில் சட்டரீதியான கட்டுப்பாடுகள்' மற்றும் 'வணிக வங்கிகள் மூலம் மோசடிகள் வகைப்படுத்துதல் மற்றும் அறிக்கையிடல்' தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ’வங்கிகளின் நிதி சேவைகளை அவுட்சோர்சிங் செய்வதில் அபாயங்கள் மற்றும் நடத்தை விதிகளை நிர்வகித்தல்’ மற்றும் ’வங்கிகளின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை தொடர்பான உத்தரவுகளை மீறியது’ ஆகியவற்றுக்காக கோடக் மஹிந்திரா வங்கி மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நிகழ்வுகளிலும், ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் செய்துள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும், ரிசர்வ் வங்கி வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்
பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!
தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!