பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா, அமெரிக்காவில் உள்ள தனது 14,000 தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக பின்லாந்தை சேர்ந்த நோக்கியா இருந்து வருகிறது. நோக்கியா தயாரிக்கும் செல்போன்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. பின்லாந்து மட்டுமின்றி அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நோக்கியாவிற்கு அலுவலகங்கள் உள்ளது. இதில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வடஅமெரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு நோக்கியாவின் 5ஜி செல்போன்களின் விற்பனை 19 சதவீதம் வரை சரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம் சுமார் 800 மில்லியன் யூரோக்கள் முதல் 1.2 பில்லியன் யூரோக்கள் வரை செலவீனத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனை எட்டும் வகையில் 2026ம் ஆண்டுக்குள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் லன்ட்மார்க் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 14 ஆயிரம் ஊழியர்களை அமெரிக்காவில் மட்டும் பணியில் இருந்து நீக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவு தொழில்நுட்ப துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!
மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!
’லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!
வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!
அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!