
2024 ஜனவரி முதல் இஎம்ஐ குறித்த தேதியில் கட்ட முடியாதவர்களுக்கு ஒரு வாரம் காலம் கிரேஸ் டைம் கொடுக்கலாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 2 முதல் 3 கோடி நேரடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது இஎம்ஐ கட்டுபவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இஎம்ஐ செலுத்த வேண்டிய தேதியைத் தவறவிட்டால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை இதுவரை பொதுவாகக் காணப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆனால் இனி வரும் காலங்களில் இந்த விதிகளில் மாற்றம் கொண்ட வரவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி , இஎம்ஐ குறித்த தேதியில் கட்ட முடியாதவர்களுக்கு ஒரு வாரம் காலம் கிரேஸ் டைம் கொடுக்கலாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான உறுதியான தேதியை ரிசர்வ் வங்கி இன்னும் வழங்கவில்லை என்றாலும், இந்த விதி 2024 ஜனவரி 1 முதல் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதி அனைத்து வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) பொருந்தும் என கூறப்படுகிறது.
சமீப காலங்களில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் செயல் பட்டியலில் (ஆக்சன் லிஸ்ட்) தற்போது குறைந்தது 20 வங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
நாளை இரவு வரை 66 ரயில்கள் ரத்து... பயணத்தை திட்டமிட்டுக்கோங்க!
அதிர்ச்சி... கழுத்தில் காயங்களுடன் பிரபல நடிகை உயிரிழப்பு! மர்ம மரணமாக வழக்குப்பதிவு!
அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துடன் ஏலக்காய்... சபரிமலையில் 6,65,000 அரவணை பாயாச டின்களை அழிப்பு!