ஒவ்வொரு 1 மணி நேரத்துக்கும் 23 பேர் பணிநீக்கம்… ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஒவ்வொரு 1 மணி நேரத்துக்கும் 23 பேர் பணிநீக்கம்… ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

கோவிட், உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு என பல்வேறு காரணங்களால் ஐடி நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவோர் எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆட்குறைப்பு அல்லது பணிநீக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 23 தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து வரும் `layoff.fyi’ வலைதளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ``உலகளவில் 2,120 தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 4.04 லட்சம் பணியாளர்களை பணி நீக்கம் செய்து இருக்கிறது. அதே போல 2022ம் ஆண்டில் மட்டும் 1,061 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1.64 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கின்றன.

இந்த ஆண்டில் கடந்த 13ம் தேதி வரை 1,059 நிறுவனங்கள் 2.40 லட்சம் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தினமும் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 23 பணியாளர்கள் வேலை இழப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in