மீண்டும் 1000 ரூபாய் நோட்டு..? ரிசர்வ் வங்கியின் விளக்கம் இதுதான்!

மீண்டும் ரூ1000 நோட்டு?
மீண்டும் ரூ1000 நோட்டு?

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை கிட்டத்தட்ட நிறைவுபெற்ற நிலையில், மீண்டும் 1000 ரூபாய் நோட்டு வெளியாகவிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனையொட்டி ரிசர்வ் வங்கியும் தனது விளக்கத்தை அளித்துள்ளது.

2016, நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கீழ் புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய 500 ரூபாய் நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளின் அறிமுகமும் புழக்கத்துக்கு வந்தன. ஆனால் அதன் பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் பூர்த்தியாகாததோடு, ரூ2000 நோட்டுக்களின் புழக்கத்தை குறைத்தாக வேண்டிய நெருக்கடியும் விளைந்தது.

ரூ2000 மற்றும் ரூ500 நோட்டுகள்
ரூ2000 மற்றும் ரூ500 நோட்டுகள்

அடுத்த 2 ஆண்டுகளில் ரூ2000 நோட்டுகள் அச்சடிப்பது படிப்படியாக நிறுத்தப்பட்டது. வங்கிக்கு சென்ற ரூ2000 நோட்டுகள் புழக்கத்துக்கு திரும்பவில்லை. இதனையடுத்து ரூ2000 நோட்டுகள் அதிகாரபூர்வமாக திரும்பப்பெறப்படலாம் என்ற ஊகங்கள் கிளம்பின. அதன்படியே செப்.30க்குள் ரூ2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இதற்கான அவகாசம் பின்னர் அக்.7 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலகங்களில் மட்டும் ரூ2000 நோட்டை மாற்றிக்கொள்ளும் வசதி தற்போது நடப்பில் இருக்கிறது. ரூ2000 நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிந்ததை அடுத்து, மீண்டும் ரூ1000 நோட்டினை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக ஊகங்கள் கிளம்பின. ரூ.500 நோட்டு மட்டுமே தற்போது பணமதிப்பில் அதிகமானதாக இருக்கிறது. பணவீக்கமும் அதிகரித்துள்ள சூழலில், பெரும் மதிப்புக்கான ரொக்கப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது இதனால் சவாலாகி வருகிறது.

மீண்டும் ரூ.1000 நோட்டு?
மீண்டும் ரூ.1000 நோட்டு?

இதன் காரணமாக, 500 ரூபாய்க்கு மிகுதியான மதிப்பில் ரூ1000 போன்ற நோட்டுகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் ’இவை அனைத்தும் ஊகத்தை அடிப்படையாக கொண்டவை. அவ்வாறு புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடும் திட்டம் இப்போதைக்கு இல்லை’ என ரிசர்வ் வங்கி விளக்கம் தந்துள்ளது.

டிஜிட்டல் இந்தியாவில் உலகே வியக்கும் வகையில் யுபிஐ உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நாட்டில் அதிகரித்திருப்பதால், ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேலும் பரவலாக்கவும் அரசு ஆர்வம் காட்டுகிறது. இதன் மூலம் மோசடிகள், வரி ஏய்ப்புகள், நிழல் உலக நிதி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பலதும் முடிவுக்கும் வரும் என்றும் மத்திய அரசு நம்புகிறது. எனவே இப்போதைக்கு ரூ.500க்கு மிகுதியான மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in