2 நாள் சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தை

இந்திய பங்கு சந்தை இன்று!
2 நாள் சரிவிலிருந்து மீண்ட பங்கு சந்தை

கடந்த 2 நாட்களாக நீடித்த சரிவிலிருந்து இந்திய பங்கு சந்தைகள் இன்று(நவ.4) மீண்டெழுந்தன.

நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 114 புள்ளிகள் உயர்ந்து 60,950-ல் நிலைகொண்டது. தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 18,117 என்பதில் முடிவுற்றது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குகள் வாங்கும் போக்கு அதிகரித்து காணப்பட்டதாலும், முன்னதாக ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் சாதகமான போக்கு தென்பட்டதும் காரணமாயின.

பங்குகளின் மத்தியில் டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை சந்தைகளின் உயர்வுக்கு காரணமாயின. இன்ஃபோசிஸ், என்டிபிசி, டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் தேக்கத்தில் தத்தளித்தன. 2 நாட்களாக சரிவில் காணப்பட்ட சந்தை வெள்ளியன்று மீண்டதில் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in