
2024-ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் 3 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால அளவு கொண்ட பத்திரங்கள் மூலம் இந்திய அரசு ரூ.6.55 லட்சத்தை திரட்ட முடிவு செய்துள்ளது.
2023-24ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ.6.55 லட்சம் கோடியை வெளிச்சந்தையில் இருந்து திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகையானது, ஆண்டு முழுவதும் மொத்த சந்தைக் கடனாகக் கணக்கிடப்பட்ட ரூ.15.43 லட்சம் கோடியில் 42.45 சதவீதம் ஆகும்.
கடன்கள் தேதியிடப்பட்ட பத்திரங்கள் வடிவில் இருக்கும். இதில் ரூ.20,000 கோடி பசுமைப் பத்திரங்கள் மூலம் வெளியிடப்படும். 3 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுடன், 20 வாராந்திர ஏலங்களில் கடன் வாங்கப்படும்.
கடன் பத்திரங்களின் முதிர்வு காலம் மற்றும் வட்டி விவரம் பின்வருமாறு அமைந்திருக்கும்: 3 ஆண்டு பத்திரங்களுக்கு 6.11 சதவீதம், 5 ஆண்டுகளுக்கு 11.45 சதவீதம், 7 ஆண்டுகளுக்கு 9.16 சதவீதம், 10 ஆண்டுகளுக்கு 22.90 சதவீதம், 14 ஆண்டுகளுக்கு 15.27 சதவீதம், 30 ஆண்டுகள் 12.21 சதவீதம், 40 ஆண்டுகள் 18.32 சதவீதம் மற்றும் 50 ஆண்டுகளுக்கு 4.58 சதவீதம் என அவை அமைந்திருக்கின்றன.
அரசாங்கம் அதன் மீட்பின் கடமைகளை திறம்பட நிர்வகிக்க முதலீடுகளை மாற்றுவதை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்திருக்கிறது. இந்த வகையில் ரூ.1 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டில் ரூ51,597 கோடி இவ்வாறு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இரண்டாம் நிதியாண்டில் பாதுகாப்பாக முதலீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை இந்திய அரசு எடுத்திருப்பதாக மத்திய நிதியமைச்சக குறிப்பு தெரிவிக்கிறது.