இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறு தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் சர்க்கரை உற்பத்தி கடுமையாக சரிந்ததோடு, உள்நாட்டில் சர்க்கரையின் விலையும் கணிசமாக உயர்ந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய வெளிநாட்டு வணிக ஆணையரகம் உத்தரவிட்டிருந்தது.
இந்தியாவில் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தி சீராகாததால் இந்த தடையை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து ஆணையரகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த தடையை மறு தேதி குறிப்பிடாமல் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஆர்கானிக் சர்க்கரை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
இருப்பினும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கட்டுப்பாடுகளுடன் வழங்கப்பட்டிருந்த விலக்குகள் தொடர்ந்து நீடிக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட அளவிலான ஏற்றுமதிக்கு பிறகு அனுப்பப்படும் சர்க்கரைக்கு, கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் கடந்த ஜூலை மாதம் முதல் பாஸ்மதி அரிசி அல்லாத பிறவகை அரிசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இருப்பினும் இந்திய அரிசியின் முக்கிய வர்த்தகர்களான நேபாளம், கேமரூன், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின், உள்நாட்டு உணவு தேவையை உறுதி செய்யும் வகையில், சில விலக்குகள் அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!