தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, இன்று 52,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து பல்வேறு புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை காரணமாக பொதுமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், 53 ஆயிரம் ரூபாய்க்கு அருகிலேயே இருந்து வருகிறது.

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,630 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53 ஆயிரத்து 080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 15 ரூபாயும் சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்து விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,615 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 52,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் விலை போக்கு காட்டி வருவதால் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் விலை உயர்வதற்கான வாய்ப்பு இருக்குமா என கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலையும் இன்று கிராமருக்கு 10 பைசா குறைந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 88 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 88 ரூபாய் 40 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 88,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in