தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 44 ரூபாய் குறைந்து 4,710 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 22 கேரட் தங்கம் சவரன் ஒன்றுக்கு 352 ரூபாய் குறைந்து ரூ.37,680 க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் குறைந்து 2,138 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ஒன்றுக்கு 384 ரூபாய் குறைந்து 41,104 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் குறைந்து 58 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதுபோல வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 58 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இது முகூர்த்த நாட்கள் அதிகம் உள்ள ஆவணி மாதம் என்பதால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் தங்க நகைகளை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in