வரலாறு காணாத விலை உயர்வு... ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 51,640 ஆக உயர்வு!

தங்க நகைகள்
தங்க நகைகள்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து 6,455 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் புதிய உச்சமாக 51,640 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி 5,815 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் ஒன்றாம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5,840 ஆக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம்
தங்கம்

கடந்த மார்ச் மாதம் முழுவதும் அடுத்தடுத்து சங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்தது. புதிய உச்சமாக கடந்த மார்ச் 27-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. அதன் பின்னரும் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 85 ரூபாய் அதிகரித்து, 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.680 உயர்ந்து புதிய உச்சமாக 51,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி நேற்று 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 60 பைசா உயர்ந்து, 81 ரூபாய் 60 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in